அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தட்சிணகன்னடா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் கம்பாளா என்ற எருமை மாட்டு பந்தயம் நூற்றாண்டுக்காலமாக பாரம்பரியமாக நடந்துவருகிறது.
கர்நாடகத்தின் ஜல்லிக்கட்டு
எருமை மாடுகளை கயிற்றில் பூட்டி, அக்கயிரை கையில் பிடித்துகொண்டு வீரர்கள், மாடுகளை சேற்றில் விரட்டி செல்வார்கள்.
அதிவேகமாக எல்லைக் கோட்டை கடந்த மாடுகளுக்கும் அதனை ஓட்டி செல்லும் வீரனுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் தென் கன்னட மாவட்ட கிராமமான மூடபத்ரியில் நேற்று நடந்தது.
இளைஞர் சாதனை
இதில் கட்டிடத் தொழிலாளியான ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற 28 வயதான இளைஞர் கலந்துகொண்டார். இவர் போட்டித் தூரத்தை தனது எருமை மாடுகளுடன் போட்டி தூரமான 142.5 மீட்டர் தூரத்தை 13.42 விநாடிகளில் ஓடி சாதனை புரிந்தார்.
100 மீட்டர் பந்தய தூரத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர், மின்னல் உள்ளிட்ட பெயர்களை தனதாக்கியவர் ஜமைக்காவின் உசேன் போல்ட் கடந்திருந்த நிலையில், கட்டட தொழிலாளியான ஸ்ரீநிவாஸ் கவுடா 142.5 மீட்டர் பந்தய தூரத்தை 13.42 விநாடிகளில் கடந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தடை நீக்கம்
தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்று கர்நாடகத்தில் நடக்கும் கம்பளா எறுமை எருதுகள் ஓட்டமும் சிக்கலை சந்தித்தது.
உசேன் போல்ட் சாதனையை ஊதித்தள்ளிய கட்டடத் தொழிலாளி இந்தப் போடடிகளின்போது எறுமை மாடுகளின் வேகத்தை அதிகரிக்க கூர்மையான ஆணி உள்ளிட்ட ஆயுதங்களால் மாடுகளை ஓட்டப்பந்தய வீரர்கள் குத்துகிறார்கள் என புகார் எழுந்தது.
இதையடுத்து இந்தப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :புலியின் புகைப்படத்தை வெளியிட்ட சிஎஸ்கே சிங்கம்!