நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிருப்தியடைந்த அம்மாநில காங்கிரஸ் நிர்வாகக் குழுத் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது பதவியிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அவர் மறுத்தார்.
கர்நாடக காங். நிர்வாகக் குழு கலைப்பு! தலைமை நடவடிக்கை - ராகுல் காந்தி
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் நிர்வாகக்குழு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
congress
இதற்கிடையே கர்நாடகாவில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவர்களை எம்எல்ஏ ரோஷன் பெய்க், கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகக் குழு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் நீடிப்பார் என ராகுல் தெரிவித்திருக்கிறார்.