தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி! - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

karnataka CM yediyurappa tests positive for corona
karnataka CM yediyurappa tests positive for corona

By

Published : Aug 3, 2020, 1:39 AM IST

Updated : Aug 3, 2020, 7:35 AM IST

சாமானியன் முதல் அதிகாரத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் வரை அனைவருக்கும் கரோனா தொற்று பரவிவருகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைத்து அரசியல் தலைவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில், கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நான் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.

எடியூரப்பா ட்வீட்

சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் உள்பட 5875 பேருக்கு கரோனா உறுதி!

Last Updated : Aug 3, 2020, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details