தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி - political secretary nr santhosh

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு நேற்று (நவம்பர் 27) தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அரசியல் செயலாளராக என்.ஆர். சந்தோஷ்
அரசியல் செயலாளராக என்.ஆர். சந்தோஷ்

By

Published : Nov 28, 2020, 9:30 AM IST

பெங்களூரு: கர்நாடகா மாநில முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக என்.ஆர். சந்தோஷ் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை, அவரது குடும்பத்தினர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக, காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவரை மருத்துவமனையில் சந்தித்து முதலமைச்சர் எடியூரப்பா நலம் விசாரித்தார். அதன் பின் பேசிய அவர், " ரமேஷ் தற்போது நலமாக உள்ளார். மருத்துவர்கள் அவருத்து நன்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் இவ்வாறு ஏன் செய்தார் என்பது தெரியவில்லை" எனக் கூறினார்.

முதலமைச்சர் எடியூரப்பாவுடன் சந்தோஷ்

கடந்த ஆண்டு (2019) காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்பதில் சந்தோஷ் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தும்கா கருவூல ஊழல் வழக்கு: லாலுவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details