தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்துக்கு சீல்! - கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

edu
edu

By

Published : Jul 11, 2020, 1:30 AM IST

கர்நாடக முதலமைச்சரின் அலுவலகமான கிருஷ்ணா இல்லத்தில் பணிபுரியும் ஒட்டுநர் உள்பட 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் எடியூரப்பா மற்றொரு இல்லத்தல் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் நலமுடன் இருக்கின்றேன். யாரும் அச்சப்பட தேவையில்லை. அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நான் வீட்டிலிருந்து சில நாள்கள் பணிபுரிய திட்டமிட்டுள்ளேன். வீடியோ கால் மூலம் அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, கிருஷ்ணா இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பிளாஸ்மா சிகிச்சை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details