காங்கிரஸ் - மதச்சாரபற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி நிர்பந்திக்க முடியாது என அவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்! - உச்ச நீதிமன்றம்
பெங்களூரு: அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழக்கில் விளக்கம் கேட்டு காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
SC
ஆனால் தீர்ப்பு கொறடா உத்தரவை மீறும்படி இருப்பதாகக் கூறி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், 1:30 மணிக்குள் வாக்கெடுப்பை நடத்தியாக வேண்டும் என்ற ஆளுநரின் கடிதத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்கெடுப்பை காலதாமதம் செய்ய காங்கிரஸ் முயற்சித்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.