மண்டியா மாவட்டம், மத்தூர் பகுதியை சேர்ந்தவர் திம்மே சுவாமி. இவர் மஜதவில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு, மர ஆலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
கர்நாடகா முதலமைச்சரின் நண்பர்கள் வீட்டில் வருமான வரிச்சோதனை
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியின் நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
கர்நாடகா முதலமைச்சர்
இதேபோல் ஹாசன், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 17 ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.சி தமண்ணா உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடந்த இந்த சோதனை அனைத்தும் முதலமைச்சரின் நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமானதாகும். மேலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துகள் மற்றும் ஆவணங்கள் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.