ஜூன் 10ஆம் தேதி பெங்களூரிலுள்ள சதாசிவநகர் பகுதியில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் கார் ஓட்டுநர் செல்ஃபோனில் பேசிக் கொண்டே கார் ஓட்டும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் குமாரசாமியின் கார் மீது போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின்படி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், நான்கு மாதமாகியும் அபராதத்தொகை செலுத்தப்படவில்லை.
அபராதத் தொகையை செலுத்தாமல் இழுத்தடிக்கும் கார்நாடக முதலமைச்சர்! - fine
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி போக்குவரத்து விதி மீறல் அபராதத் தொகையை நான்கு மாதமாகியும் செலுத்தாமல் இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு
இது குறித்து உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் அபராத தொகையைச் செலுத்த வேண்டும். நான்கு மாதங்களாகியும் போக்குவரத்து அபராதத் தொகை செலுத்தப்படவில்லை. அபராதத் தொகை இனியும் செலுத்தவில்லையெனில், குமாரசாமியின் கார் சாலையில் செல்லும்போது நிறுத்தி அபராதத் தொகை வசூலிக்கப்படும்’ என காட்டமாகக் கூறினார்.