பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சரவை இன்று (ஜன.13) விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 7 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே பி நட்டா மற்றும் பாஜக மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று புதிதாக 7 பேர் கர்நாடக அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இந்த 7 பேரும் பெங்களூரு ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா முறைப்படி பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார். புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, அங்கர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர்கள் ஷபன்ஹா, சிபி யோகேஷ்வர், எம் டி பி நாகராஜ் ஆகியோர் ஆவார்கள்.
காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி 2019இல் கவிழ்ந்தது. அதன்பின்னர் பி எஸ் எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார்.
அவர் ஆட்சிக்கு வந்த பின்பு அமைச்சரவை மூன்றாவது முறையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர்மட்ட குழு ஆலோசனைக்காக டெல்லி புறப்பட்ட எடியூரப்பா