தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் - ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா! - 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

karnataka Byelection results live
karnataka Byelection results live

By

Published : Dec 9, 2019, 12:32 PM IST

Updated : Dec 9, 2019, 1:49 PM IST

13:49 December 09

அதேபோல் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பேசுகையில், மக்கள் தீர்ப்பால் நிலையான அரசாங்கத்தை நிறுவமுடியும். கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார். 

13:48 December 09

தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். 

12:01 December 09

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக் குறித்த செய்திகளை ஈடிவி பாரத் உடனுக்குடன் வழங்குகிறது.

கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. 

இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன் விவரங்கள் இதோ:

சிவாஜி நகர் - காங்கிரஸ் முன்னிலை

ஹுன்சூர் - காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுநாத் வெற்றி

ஹிரேகேகூர் - பாஜக வேட்பாளர் பி.சி.பாட்டீல் வெற்றி

ராணிபென்னூர் - பாஜக வேட்பாளர் அருண் குமார் பூஜா வெற்றி

மகாலெச்சுமி லேஅவுட் - பாஜக முன்னிலை

கே.ஆர்.புரம் - பாஜக முன்னிலை

கே.ஆர். பேட் - பாஜக வேட்பாளர் நாராயண் கவுடா வெற்றி

யஷ்வந்த்பூர் - பாஜக முன்னிலை

சிக்பளாப்பூர் - பாஜக வேட்பாளர் சுதாகர் வெற்றி

விஜயநகரா - பாஜக வேட்பாளர் ஆனந்த் வெற்றி

அத்தானி - பாஜக வேட்பாளர் மஹேஷ் குமடல்லி வெற்றி

கோகாக் - பாஜக வேட்பஆளர் ரமேஷ் வெற்றி

ஹொசாகொட் - சுயேட்சை வேட்பாளர் கஜிகவுடா முன்னிலை 

காக்வாட் - பாஜக வேட்பாளர்  ஸ்ரீமாத் பாட்டீல் வெற்றி

எல்லாபூரா - பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பார் வெற்றி

இந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியால் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Last Updated : Dec 9, 2019, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details