தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! - கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவை தொகுதி

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

Karnataka by polls - Voting begins for 15 assembly constituencies
Karnataka by polls - Voting begins for 15 assembly constituencies

By

Published : Dec 5, 2019, 7:52 AM IST

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடந்த போது, அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது, பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், காலியாகவுள்ள 15 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

வாக்குபதிவு தொடக்கம்!

இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளிலில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழங்கு நிலுவையில் உள்ளதால், இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சிதம்பரம் வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கிறது - வைகோ!

ABOUT THE AUTHOR

...view details