தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா? - கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைப்பாரா எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடைபெற்று வருகிறது.

karnataka by-election poll results out today
karnataka by-election poll results out today

By

Published : Dec 9, 2019, 10:28 AM IST

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.

இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளிலில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக ஏற்கனவே வழங்கு நிலுவையில் உள்ளதால், இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை.

இந்நிலையில், காலியாகவுள்ள 15 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு இன்று எண்ணப்படுகிறது. இந்த 15 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஆறு தொகுதியிலாவது முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details