கர்நாடக மாநிலம் விஜயபுரா நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று காவல்துறை சோதனையில் இருந்த தப்பிக்க முயன்று கர்நாடக அரசுப் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.
காவல்துறையினர் வாகனத்தை எரித்த பொதுமக்கள்! - வாகனத்தை பொதுமக்கள் எரித்த சம்பவம்
கர்நாடகா: காவல்துறையினரின் வாகனப் பரிசோதனையால் விபத்து ஏற்பட்டதாகக் கூறி காவல்துறையினரின் வாகனத்தை பொதுமக்கள் எரித்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
![காவல்துறையினர் வாகனத்தை எரித்த பொதுமக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4624936-706-4624936-1570008932449.jpg)
karnatka
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை எரித்து நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.