தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா 2ஆம் அலை: கர்நாடகாவில் புத்தாண்டுக்குத் தடை?

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள மீண்டும் பொது நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

second-wave-of-covid-19
second-wave-of-cosecond-wave-of-covid-19vid-19

By

Published : Dec 3, 2020, 2:04 PM IST

கரோனாவின் இரண்டாம் அலை அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் முனைப்பாக உள்ளன. இந்தியாவிலும் கரோனாவின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதைத்தொடர்ந்து கர்நாடக மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இரண்டாம் அலையை தவிர்க்க மாநில அரசிற்கு சில பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரையில்,

  • வரும் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை இரவு 8 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு
  • புத்தாண்டின் பொது கொண்டாட்டத்திற்குத் தடை
  • மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை ஒத்திவைத்தல்
  • பொது நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், திருவிழா கொண்டாட்டங்களுக்குத் தடையை தொடருதல்
  • நீச்சல் குளங்களுக்குத் தடை, விளையாட்டுகளுக்கு அடுத்தாண்டு பிப்ரவரி வரை தடையை தொடருதல் உள்ளிட்டவை பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி கர்நாடகாவில் மீண்டும் கடுமையான கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா 2ஆம் அலைக்கு நடுவே பள்ளிகள் திறப்பா? - ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details