தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்த 3வயது சிறுவன்! - கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்த 3வயது சிறுவன்: அப்படி என்ன சாதனை?
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்த 3வயது சிறுவன்: அப்படி என்ன சாதனை?

By

Published : Sep 12, 2020, 5:05 PM IST

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் அத்வைத் சர்தேஷ்முகா. இவரின் நினைவாற்றலாலும், பொது அறிவு திறமையாலும் தனது பெயரை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் பதித்துள்ளார்.

சிறுவன் அத்வைத் ஏழு கண்டங்கள், மாநிலங்களின் தலைநகரங்கள், கிரகங்கள் என அனைத்தும் கேட்க கேட்க அந்த மழலை குரலில் அடுக்கி வைக்கிறார்.

அதுமட்டுமின்றி மாநிலங்கள் பெயர்கள், மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பெயர்கள், 28 நட்சத்திரங்கள், கன்னடம், ஆங்கிலம், இந்தியில் எண்கள், ராசிகள், வெவ்வேறு ஸ்லோகங்கள், இதிக்காச கதைகளிம் பெயர்கள் என அனைத்தையும் அசால்டாக சொல்லி அசத்துகிறார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்த 3வயது சிறுவன்: அப்படி என்ன சாதனை?

சிறுவன் அத்வைத் சர்தேஷ்முகா தாயார் ஸ்வேதா சர்தேஷ்முகா, ஒரு தனியார் பள்ளி ஆசிரியையாவும், தந்தை விநாயகர் சர்தேஷ்முகா ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியராகவும் உள்ளனர்.

இவரின் திறமை கண்ட பெற்றோர் அவரை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால் தான் தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அத்வைத் சர்தேஷ்முகா பெயரில் ஒரு யூடியூப் சேனலும் உள்ளது. அதில் அவர் பாடுவது, ஓவியம் தீட்டும் வீடியோக்கள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...மருத்துவக் கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details