கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையிலேயே படுத்துறங்கிய பாஜக எம்எல்ஏக்கள்: காரணம் இது தானா?
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணி தங்களின் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலே படுத்து உறங்கினர்.
karnataka BJP MLA sleeping On assembly
இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சட்டப்பேரவையிலேயே அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலே படுத்துறங்கினர். மேலும் இன்று காலை நடைபயிற்சியும் மேற்கொண்டனர். இதனால் சட்டப்பேரவையை சுற்றிலும் அதிகளவிலான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.