தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறைந்த விலையில் வென்டிலேட்டர் - கர்நாடக மருத்துவர் சாதனை - OZ வேடர்

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குறைந்த விலை கொண்ட வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதனை அவர் உருவாக்கியுள்ளார்.

Karnataka
Karnataka

By

Published : May 17, 2020, 4:23 PM IST

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சோமவராபேட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கிரண் சேகர். இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரின்ஸ் சார்லஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) மூத்த வல்லுனராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் செயற்கை சுவாசத்திற்கு உதவும் வகையில், குறைந்த விலையில் வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர். "OZ வேடர்" என்று அழைக்கப்படும் இந்த வென்டிலேட்டர், சந்தையில் கிடைக்கும் மற்ற வென்டிலேட்டர்களை விட 10 மடங்கு விலை குறைவானது.

இந்தியாவில், இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட், மஹிந்திரா, இந்திய ரயில்வே ஆகியவை குறைந்த விலையில் வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவை அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிரைக் காப்பாற்ற இந்த வென்டிலேட்டர் உதவியாக இருக்கும் என மருத்துவர் கிரண் சேகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவிட் -19க்கு எதிரான போராட்டத்திற்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் அறக்கட்டளை ரூ. 3100 கோடி ஒதுக்கீடு - பிரதமர் அலுவலகம்

ABOUT THE AUTHOR

...view details