கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. முன்னதாக, கர்நாடக சபாநாயகர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஜனநாயகத்துக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் எதிராக நடந்து கொள்கிறார் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
'என் மீது சேற்றை வாரி வீசாதீர்கள்' - கர்நாடகா சபாநாயகர் - கே. ஆர். ரமேஷ் குமார்
பெங்களூரு: என் குணநலங்களின் மீது சேற்றை வீசுபவர்கள், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், "என் குணநலங்களின் மீது சேற்றை வீசுபவர்கள், அவர்களை முதலில் சுயபரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். என்னிடம் லட்சங்கள் இல்லை என அனைவருக்கும் தெரியும். எப்படிப்பட்ட குற்றச்சாட்டு வந்தாலும் ஒரு தலைபட்சமாக செயல்பட மாட்டேன்" என்றார்.
முன்னதாக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்று கொள்ளும்படி சபாநாயகருக்கு உத்தரவு அளிக்க முடியாது என அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.