கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தனர். இதனால், அம்மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், இன்று காலை கர்நாடக சட்டப்பேரவை கூடியது. அதிருப்தி எம்எல்ஏக்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதில் காரசாரமாக பேசிய முதலமைச்சர் குமாரசாமி, இன்றைக்குள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தார். பின்னர் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்குமாறு வலியுறுத்தினார்.