தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்கு களிமண் சிலை செய்த கலைஞர் - கேரளாவில் உயிரிழந்த யானைக்கு சிலை செய்த கலைஞர்

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் களிமண்ணால் சிலை ஒன்றை கர்நாடக சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ளார்.

Karnataka artist makes clay model of Kerala pregnant elephant
Karnataka artist makes clay model of Kerala pregnant elephant

By

Published : Jun 5, 2020, 5:05 AM IST

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ஹிரேமத் என்ற சிற்பக் கலைஞர் ஒருவர் கேரளாவில் கொல்லப்பட்ட கர்ப்பிணி யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யானை சிலை ஒன்றை களிமண்ணால் உருவாக்கியுள்ளார்.

யானையின் கருவில் குட்டி இருப்பதைப் போன்று அந்த சிலையை ஹிரேமத் உருவாக்கியுள்ளார். தான் உருவாக்கிய சிலையின் வழியாக விலங்குகளின் உரிமை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க விரும்பியதாக ஹிரேமத் தெரிவித்தார்.

இது போன்ற கடுமையான குற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு பட்டாசுகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழங்களை உள்ளூர்வாசிகள் வழங்கியதையடுத்து அந்த யானை பரிதாபமாக உயிர் இழந்தது. இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'வந்தே பாரத் விமான சேவைகளுக்கு தடைவிதிக்கவில்லை' - பினராயி விஜயன்

ABOUT THE AUTHOR

...view details