கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டத்தில் உள்ள குடநூறு கிராமாத்தில் மதிகௌடா என்பவரின் மகனான ராஜசேகர் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பு படித்தவர்.
ராஜசேகர் படித்த படிப்புக்கு லட்சக்கணக்கில் வருமானம் தரக்கூடிய வேலைகள் கிடைத்தும் அவை யாவையும் உதறித் தள்ளிவிட்டு, விவசாயம் மீது கொண்ட நாட்டத்தினால் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்ய முனைந்துள்ளார். குறிப்பாக, தனது அரை ஏக்கர் நிலத்தில் வட இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரத்து 600 ஸ்ட்ராபெர்ரி செடிகளைப் பயிரிட்டு விவசாயத்தைத் தொடங்கினார்.