கர்நாடக மாநிலம், சம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை - ஊட்டி சாலையில் உள்ள வனப்பகுதியில் ஐந்து இறந்த கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்: ஐந்துபேர் தற்கொலை - Karnataka family suicide news
சம்ராஜநகர்: தொழில் நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர்கள் ஐந்துபேரும் மைசூருவைச் சேர்ந்தவர்கள் என்பதும், குண்டல்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று அவர்கள் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரியல்எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
.