தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'9 நாட்கள் டி.கே.சிவக்குமாருக்கு காவல்' - கிடுக்குப்பிடிபோட்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம்! - dk shivakumar case

டெல்லி: சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதான காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து டெல்லி சிறப்பு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.கே.சிவக்குமார்

By

Published : Sep 4, 2019, 7:40 PM IST

காங்கிரசின் மூத்தத் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. தன் கைது குறித்து சில ட்வீட்களையும் டி.கே.சிவக்குமார் பதிவிட்டார். அதில், கைது செய்த பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் எனவும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிகழ்வு, பல காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டி.கே.சிவக்குமார்

இந்நிலையில், கைது செய்த டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியது. சிவக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான தயான் கிருஷ்ணன், அபிஷேக் மனு சிங்வி ஆகிய இருவரும் ஆஜராகினர்.

அமலாக்கத்துறை தரப்பில் வாதிட்ட கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.என்.நட்ராஜ், 'பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்பி அவரை விசாரித்ததில், அவர் முறையாக உண்மையைக் கூறவில்லை. மேலும், பணத்தை கைப்பற்றும்போது சாதுர்யமாக பேசி விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்தார். எனவே, 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.

இதனை எதிர்த்து வாதிட்ட சிவக்குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ' அமலாக்கத்துறை சிவக்குமாரை காவலில் எடுப்பதற்கு வலுவான ஆதாரங்கள் தேவை. ஆனால், வலுவான ஆதாரங்கள் எதையும் அமலாக்கத்துறை சமர்பித்ததாய் தெரியவில்லை. எனவே, 14 நாட்கள் சிவக்குமாரை காவலில் எடுப்பதற்கு அனுமதி அளிப்பது மிக அவசியமா என்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.

டி.கே.சிவக்குமார்

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர், கைது செய்த டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details