1999ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இதில் கடும் உயிர் சேதங்களுக்குப்பின், இந்தியா வெற்றிபெற்றது. இப்போரில் இந்தியா பெற்றவெற்றியை நினைவுகூரும் வகையிலும் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!
டெல்லி: 20ஆவது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர்
இந்நிலையில், 20ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.