தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கம்! - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Kargil Vijay Diwas: India pays tribute to Kargil heroes

By

Published : Jul 26, 2019, 7:31 PM IST

கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இதில் கடும் உயிர் சேதங்களுக்குப்பின், இந்தியா வெற்றிபெற்றது. இப்போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையிலும் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நினைவிடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட்

மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், '1999இல் நடந்த கார்கில் போரின்போது, ​​அங்கு சென்ற நமது துணிச்சலான வீரர்களுடைய ஒற்றுமையைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அச்சமயத்தில் நான் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் எனது கட்சிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கார்கிலுக்கான எனது பயணமும் வீரர்களுடனான கலந்துரையாடல்களும் என்வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள்' என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

20ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும், கார்கில் போர் நினைவு தினம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ட்வீட் செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்வீட்!
நடிகை டாப்சி ட்வீட்
உங்களின்(கார்கில் ராணுவ வீரர்கள்) ஒரு நாளும் மறக்க மாட்டோம் -விராட் கோலி
கார்கில் போரில் போரிட்ட ராணுவ வீரர்களை தலைவணங்குகிறேன் -விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா!

ABOUT THE AUTHOR

...view details