1999ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவத்தினர் போர் நடத்தினர். போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற அப்போரில் நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வீதமாக ஒவ்வொறு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டியும், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவிடத்தில் இன்று (ஜூலை 26) முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.