கார்கில் போர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தெலங்கானா சூர்யாபேட்டையில் உள்ள கார்கில் வீரர் லான்ஸ் நாயக் கோபயா சாரிவோவின் மனைவி சாரதா, தனது குடும்பத்தில் உள்ள எவரேனும் ராணுவத்தில் சேரலாமா என ஆலோசனைக் கேட்டால் தயங்காமல் என்னிடம் பதில் உள்ளது என்கிறார்.
'ராணுவத்தில் சேர அஞ்சாதீர்கள்'- கார்கில் போரில் பலியான வீரரின் மனைவி!
தெலங்கானா: 'எனது கணவர் தன் நாட்டைக் காக்கவே உயிர் தியாகம் செய்தார். அது எனக்கு எப்போதும் பெருமையையே அளிக்கிறது' என கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த லான்ஸ் நாயக் கோபய்யா சாரிவோவின் மனைவி கூறியுள்ளார்.
எனது கணவர் 1999ஆம் ஆண்டு கார்கிலில் கொல்லப்பட்டார். அவர் ராணுவத்தில் பணியாற்றுவதை பாக்கியமாகக் கருதினார். நாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட. நீங்கள் எந்த ஆபத்திற்கும் பயப்பட வேண்டாம். எனது கணவரும், அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் எதிரிகளால் தாக்கப்பட்டு இறந்தாலும் அவர்கள் ஆபத்தை நேருக்கு நேர் சந்தித்து, நாட்டைக் காக்க இறுதி மூச்சுள்ளவரை போராடினர் என்று பெருமிதம் கொள்கிறார்.
நாயக் கோபய்யா சாரிவோவின் மகள் மௌனிகா, இறுதிவரையிலும் நாட்டின் வெற்றிக்காக போராடிய அவர்களின் மன உறுதியையும், எண்ணவோட்டத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனது தந்தையின் வீரத்தை எண்ணி நான் பெருமையடைகிறேன் என்று கூறுகிறார்.