மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று (ஆகஸ்ட் 04) வெளியிடப்பட்டன. இறுதி நேர்முகத் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் காரைக்காலை சேர்ந்த மாணவி புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம்
புதுச்சேரி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் காரைக்காலை சேர்ந்த சரண்யா என்ற மாணவி புதுச்சேரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதில் காரைக்கால் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரண்யா (25) என்ற மாணவி இந்திய அளவில் 36ஆவது இடமும், புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு சரண்யா அளித்த பேட்டியில், ”சிறுவயது முதலே ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றவே அதற்கான சிறந்த வழியாக குடிமைப் பணியை தேர்வு செய்துள்ளேன். மேலும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்ள கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சித்து, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்வதே எனது லட்சியம்” என்று அவர் தெரிவித்தார்.