தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரைக்காலில் விரைவில் லஞ்சஒழிப்புத்துறை அலுவலகம் திறக்க நடவடிக்கை - லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு முகாம்

புதுச்சேரி: காரைக்காலில் விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அகான்ஷா யாதவ் தெரிவித்துள்ளார்.

அகன்ஷா யாதவ்
அகன்ஷா யாதவ்

By

Published : Oct 21, 2020, 4:48 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டு பணிகளை காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் பொதுமக்களிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தது.

மேலும் சமூக வலைதளங்களிலும் காரைக்காலில் லஞ்சம் கேட்டு அரசு பணியாளர் தங்கள் பணிகளை செய்ய மறுத்து வருவதாக பதிவுகள் வலம்வந்தன.

அதனையடுத்து இன்று (அக்டோபர் 21) புதுச்சேரியில் இருந்து அரசு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அகான்ஷா யாதவ் தலைமையில் ஒரு குழு புகார் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ள காரைக்காலுக்கு வந்துள்ளனர்.

காரைக்கால் காமராஜர் வளாகத்தில் முகாமிட்டுள்ள இவர்கள் நான்கு நாள்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகான்ஷா யாதவ், உலகை அச்சுறுத்தும் கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து பொதுமக்கள் புதுச்சேரிக்கு நேரில் வந்து புகார்களை அளிக்க சிரமப்படுவதால் அவர்களின் வசதிக்காக காரைக்காலில் முதல்முறையாக இந்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் எந்த பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

பொதுமக்களின் புகார்கள் வருவதைப் பொறுத்து இந்த முகாம் விரிவுபடுத்தப்படும். மிக விரைவில் காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் லஞ்சம் தொடர்பான புகார்களை 9448427787, 0413 2238016 - 0413 2238017 என்ற எண்களில் தெரிவிக்கலாம். காரைக்காலில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details