நீதித்துறை, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் துயரங்கள், அவர்களின் அவல நிலை குறித்து கவனித்து, அவற்றுக்கு விடை தேட வேண்டும் என காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், அவுரல்யா மாவட்டத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திலும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புகையில் ஏற்பட்ட கோர விபத்துகள் குறித்து பேசியுள்ள கபில் சிபல், ”தங்கள் சொந்த ஊர் திரும்ப நாடு முழுவதும் காத்திருக்கும் 20 லட்சம் தொழிலாளர்களால் இனியும் காத்திருக்க முடியாது. போதிய பணம் இல்லாமல் தவித்துவரும் இவர்கள் தினந்தினம் இறந்து கொண்டிருக்கிறார்கள்.