இதுகுறித்து அவர் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து கேட்கிறேன், பிரதமர் நிதிக்கு வந்த எவ்வளவு பணத்தை தொழிலாளர்களுக்கு அவர் வழங்கியுள்ளார்? வெகுஜன தொழிலாளர்கள் நடைபாதையாக சென்றும், ரயில்களிலும், பசி கொடுமையாலும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் யாருக்கெல்லாம் அவர் பணம் வழங்கியுள்ளார்?
பேரிடர் மேலாண்மை சட்டம் 12இன்படி, உயிரிழந்தவர்களுக்கும் பேரிடர் காலங்களில் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும்போது பரிவுத்தொகை நிதியிலிருந்து அவர்களுக்கு குறிபிட்ட நிதியை அளிக்க வேண்டும். அப்படி இருக்க கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களில் எத்தனை பேருக்கு எவ்வளவு நிதியினை பிரதமர் வழங்கி உதவியுள்ளார்?.