உத்தரப் பிரதேசம், கான்பூரில் வசிக்கும் பூஜா படேல், கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், புதிதாக ஷாக் கீ செயின் ஒன்றை டிங்கர் இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைத்துள்ளார். இதற்கு 'எமர்ஜென்சி ஷாக் கீ செயின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து பூஜா கூறுகையில், "இந்தக் கருவியில் உள்ள பொத்தனை அழுத்தினால், அதிலிருந்து 220 - 440 வோல்ட் மின்சாரம் பாயக்கூடும். இந்த மின்சாரம் குற்றவாளியை மயக்கமடையச் செய்ய போதுமானது ஆகும். பெண்களிடம் வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்யும் நபர்களுக்கு, இந்தக் கீ செயின் ட்ரீட்மெண்ட் சரியாக இருக்கும். இது ரீசார்ஜபிள் பேட்டரி கொண்டுள்ளதால் சார்ஜ் செய்வதும் மிகவும் எளிது" என்றார்.