லக்னோ:மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ரவுடி கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் உருவப்படத்தை கொண்ட தபால் தலைகள் அச்சிடப்பட்டிருப்பது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்ட தபால் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் எனது தபால் தலை (My Stamp) திட்டத்தின் கீழ், இந்தத் தபால் தலைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தபால் தலை ஒன்றின் விலை 5 ரூபாயாகும். இதுதொடர்பான விசாரணையில், 600 ரூபாய் கட்டணம் செலுத்தி ரவுடிகளின் தபால் தலைகள் அச்சிடப்பட்டிப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளின் தபால் தலைகள் அச்சிடப்பட்டதற்கு, தபால் துறையின் அலட்சியப்போக்கே காரணம் எனச் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.