உத்தரப் பிரதேச மாநிலம் காதம்பூரில் உள்ள கான்பூர்-பண்டா ரயில் பாதையில் 28 வயது மதிக்கத்தக்க ஒருவர், இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
யார் அந்த நபர்?
தகவலறிந்து வந்த காவல் துறையினர், ரயிலில் அடிப்பட்டு கிடந்த நபர் பாஜக பொதுச் செயலாளர் உமேஷ் திவேதியின் மருமகன் லலித் என கண்டறிந்தனர். அவரது உடலை மீட்டு உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லலித்தின் உறவினர்கள், பாஜக எம்எல்ஏ., தேவேந்திர சிங் ஆகியோர் காவல் துறையினரிடம் விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தினர்.