கேரள மாநிலம் கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய மூவரை, அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் யதிஷ் சந்திரா கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தார். அது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைக் கண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தோப்புக்கரணம் போட வைத்த எஸ்.பி., - அதிருப்தியில் முதலமைச்சர் - முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் காணொலி வைரலானதைக் கண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார்.
Ker CM expresses displeasure
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது, ஏனெனில் இதுபோன்ற செயல் காவல்துறையினரால் செய்யப்படும் நல்லப்பணிகளுக்கும் களங்கம் விளைவிக்கும்" எனத் தெரிவித்தார். மேலும் கேரள மாநிலத்தின் பல இடங்களில் காவல்துறையினர் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கேரளா சுற்றுலா பயணிகள் உயிரிழந்த விவகாரம் - பினராயி விஜயன் கோரிக்கை!