தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கனிமொழி - நிர்மலா சீதாராமன் திடீர் சந்திப்பு! - சேலம் உருக்காலை

டெல்லி: திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி சேலம் உருக்காலை மேம்பாடு தொடர்பாக கோரிக்கை வைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

kani

By

Published : Jul 31, 2019, 9:52 PM IST

தூத்துக்குடி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். நாட்டில் இயங்கிவரும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார்மயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை தொழிற்சங்கத் தலைவர்களுடன் கனிமொழி, நிர்மலா சீதாராமனை அலுவலகத்தில் சந்தித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.

கனிமொழியின் ட்விட்டர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details