ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக செயல்பட்ட கன்னையா குமார், 2016-இல் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். அதில், நாட்டிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறி கன்னையா குமார் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை துணிச்சலுடன் கூறியவர் இவர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பீகாரிலுள்ள பெகுசராய் தொகுதியில், கன்னையா குமார் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார். பீகாரில், காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கிறது.