தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டை இடிக்க தடைக்கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தனது வீட்டை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இடிப்பதற்கு தடைக்கோரி, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவினை மும்பை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்

By

Published : Jan 2, 2021, 12:27 PM IST

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்டத்தினை மீறி வீடு கட்டியதாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அம்மாநகராட்சி நிர்வாகம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தினைப் போல, கட்டடத்தை சீரமைக்க வேண்டும், அல்லது கட்டடம் இடித்து தள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, கங்கனா ரணாவத் மும்பையிலுள்ள சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில், தனது வீட்டினை மாநகராட்சி நிர்வாகம் இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், மாநகர நிர்வாகம் அங்கீகரித்த திட்டத்திற்கு எதிராக மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்து ஒரே வீடாக கட்டப்பட்டுள்ளதால், இது சட்டவிதிமீறலாகும் எனக்கூறி கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

முன்னதாக, சட்டவிரோதமாக பங்களா கட்டியதாக மும்பையிலுள்ள பாலி கில் பகுதியிலிருந்த கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியினை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

இதுதொடர்பான வழக்கினை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கருத்து தெரிவித்தது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் பொங்கல் பரிசு: குடும்ப அட்டைக்கு ரூ.200 வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details