தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு: தமிழர் உள்பட 5 பேருக்கு சிறை.!

கொச்சி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞர் உள்பட 5 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

kanakamala is case : mastermind gets 14 years jail term
kanakamala is case : mastermind gets 14 years jail term

By

Published : Nov 27, 2019, 7:18 PM IST

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்திலுள்ள கனகமலா என்ற பகுதியில் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.ஐ.எஸ்., ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் கேரளத்தின் தடைசெய்யப்பட்ட இயக்கமான அன்சர் -உல்-கலீபா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டல், அவர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளுதல், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் குண்டு வைத்து தாக்குதல் உள்ளிட்ட சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். மேலும் மூத்த அரசியல்வாதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த காவலர்கள் மற்றும் அஹமதியா பிரிவு முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை கொல்லவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு (Unlawful Activities Prevention Act (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கில் மொத்தம் 70 சாட்சியங்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான மன்சீத் முகம்மதுவுக்கு (Manseed Mehmood) நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சுவாலியா முகம்மதுவுக்கு (Swalih Mohammed) 10 ஆண்டுகளும், ராஷித் அலிக்கு (Rashid Ali ) 7 ஆண்டுகளும், சப்வான்னுக்கு (Safvan) 8 ஆண்டுகளும், மொய்னுதீன் பரக்கடவுக்கு (Moinudin Parakkadavu) 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ராஷித் அலி தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். ராம்ஷாத் என்.கே (Ramshad N K) என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொருவரான என்.கே. ஜாசிம் (Jasim N K) என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிருபிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

கொச்சி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பயங்கரவாதிகள்

சிக்கியது எப்படி?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்குக் கிடைத்த தவலின் பேரில், பார்வையை கேரளத்தின் பக்கம் திருப்பினர். அதன் பின்னர் நடந்த அதிரடி சோதனையில் இவர்கள் 7 பேரும் சிக்கினர். யூதர்கள் மீது தாக்குதல் மற்றும் தென்னிந்திய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே இவர்களின் முதல் திட்டமாக இருந்துள்ளது.
அதற்காக தயாரான நிலையில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம் தவிர, இந்திய தண்டனைச் சட்டம் 120(பி) குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.!

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 33 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details