தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கம்லேஷ் திவாரியை கொன்றவர்கள் பிடிபடுவார்களா? - இந்து அமைப்பு தலைவர் கொலை வழக்கு

லக்னோ: இந்து சமாஜ் கட்சி நிறுவனர் கம்லேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொலை செய்தவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Kamlesh

By

Published : Oct 21, 2019, 7:18 AM IST

உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் இந்து அமைப்பான ஹிந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கம்லேஷ் திவாரி, அக்டோபர் 18ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கம்லேஷ் வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு படக்கருவியின் பதிவை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள், கையில் இனிப்புப்பைகளுடன் வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினர், "தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கச் செல்வதாகக் கூறி வீட்டிற்குள் அவர்கள் சென்றிருக்க வேண்டும். இனிப்பு பைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

கம்லேஷ் திவாரி கொலை தொடர்பாக சூரத்தைச் சேர்ந்த மூவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், மவுலானா மொஹ்சின் ஷேக் (24), குர்ஷித் அகமது பதான் (23) பைசன் (21) என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினர். மாநில காவல்துறையின் மேல் நம்பிக்கை இல்லாததால் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கொலை செய்தவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிலேயே, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘தலையை எடு... ஒரு கோடி தரேன்’ அதிரவைத்த சிவசேனா தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details