உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நான்கு நாட்களுக்கு முன்பு இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் இருவரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், சூரத்தில் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கமலேஷ் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இருவர் அதிரடி கைது! - Kamlesh Tewari murder case
லக்னோ: இந்து சமாஜ் கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![கமலேஷ் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இருவர் அதிரடி கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4840695-thumbnail-3x2-kjh.jpg)
காவல் துறையினர் நடவடிக்கை
மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி கூறிய சர்ச்சைக்குரிய சில கருத்துகளுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இனிப்பு பெட்டிக்குள் கத்தியை மறைத்து எடுத்துவந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த இனிப்பு பெட்டியில் இருந்த முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகளின் சொந்த ஊர் சூரத் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கம்லேஷ் திவாரியை கொன்றவர்கள் பிடிபடுவார்களா?