காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பாபாரியா, "மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து கமல் நாத் விலக முன்வந்துள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"கடந்தாண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச தேர்தலையடுத்து பதவி விலக நான் முன்வந்தது குறித்து அவர் ( தீபக் பாபாரியா) கூறியிருக்கிறார். என் மீது அளவுக்கு அதிமான சுமைகள் இருந்ததால், வேறு யாரிடமாவது ஒப்படையுங்கள் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்" எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 20 தொகுதிகளில் சிந்த்வாரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.