தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘எந்த ஜென்மத்திலும் தொகுதி மக்களை கைவிடமாட்டேன்’ - வெற்றி பெற்ற ஜான்குமார் - அடிப்படை வசதிகளை

புதுச்சேரி: தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்று காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் தெரிவித்துள்ளார்.

john kumar

By

Published : Oct 24, 2019, 12:37 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் புவனேஸ்வரன் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 21ஆம் நடந்த நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியது.

மூன்று சுற்றுகளின் முடிவில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

வெற்றிக்கொண்டாட்டத்தில் ஜான் குமார்

இந்தச்சூழலில் ஜான்குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் குமார், "காமராஜ் நகர் தேர்தலில் என்னை வெற்றி பெறச்செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இந்தத் தொகுதி மக்களுக்கு முதல்கட்டமாக அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்.

அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுவேன். எனது வெற்றிக்காக பாடுபட்ட கட்சித்தொண்டர்கள், திமுக தலைவர்கள், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகளுக்கும் நன்றி" என்றார். பின்னர், புதுச்சேரி துணை தேர்தல் அலுவலர் குமாரிடமிருந்து தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க:‘பிகில்’ படத்தின் கதைக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details