தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவைத்தேர்தலில் களமிறங்கும் முதலமைச்சர் மகன்! - நகுல்நாத்

டெல்லி: மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்தியபிரதேச முதலமைச்சரின் மகன், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம்

By

Published : Apr 4, 2019, 4:46 PM IST

Updated : Apr 4, 2019, 6:55 PM IST

மக்களவைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் நோக்கத்தில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 12 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதில் மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் ராகுல், ‘ஷித்தி’ தொகுதியிலும், அருண்யாதவ் ’கான்த்வா’ தொகுதியிலும் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கும் தேர்தல் வாக்குப்பதிவு மே 6 மற்றும் மே 12 என மூன்று கட்டங்களாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 4, 2019, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details