உத்தரப் பிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவர் நாக்கு துண்டிக்கப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தப் பெண் உயர் வகுப்பை சேர்ந்த நால்வரால் கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளாக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்து உயிரிழந்துள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.
இது நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அப்பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இது தவறான அரசியல் நடத்தை. உத்தரப் பிரதேச காவல்துறை வெட்கம் கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் கொள்கை, தத்துவத்தை பொருட்படுத்தாமல் நாம் இதுபோன்ற குண்டர்களுக்கா வாக்களித்தோம்?
இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பான்மையினரால் கண்டிக்கப்படாவிட்டால், நாட்டில் வெறுப்பும், பகையும் பன்மடங்கு பெருகும்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் விவகாரம்: தடுப்பு காவலில் ராகுல், பிரியங்கா காந்தி