தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - cctv released kamlesh tiwari

உத்தரப் பிரதேசம்: இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரியை சுட்டுக்கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Kamalesh Tiwari killing news update, கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்கள் சிசிடிவி காட்சிகள்

By

Published : Oct 19, 2019, 11:19 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி, அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு அகில பாரத இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.

மேலும், காவல் துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதில் கமலேஷ் திவாரிக்கு பழக்கமுள்ளவர்களே இதனை செய்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவரை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கமலேஷ் திவாரியை கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள்

இதற்கிடையே, கமலேஷ் திவாரி உடலை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்து பார்க்கும்வரை எடுக்கமாட்டோம் என்று உறவினர்கள், அவரது மனைவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: துப்பாக்கியுடன் நடனமாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details