இது தொடர்பாக அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன்“ என்று பதிவிட்டுள்ளார்.
மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? - கமல்
பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
tweet
அதோடு, மக்களிடமிருந்து எந்த எந்த துறையில் எவை எவற்றிற்கு எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற பட்டியலையும் அவர் இணைத்து வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு டோக்கன்: அதிமுகவினர் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்!