தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கமல்நாத் மீது சிவ்ராஜ்சிங் சவுகான் தாக்கு! - கரோனா வைரஸ்

போபால்: மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவ, கமல்நாத்தின் முந்தைய அரசின் அலட்சியமே காரணமென்று தற்போதைய முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

Shivraj Singh Chouhan Kamal Nath coronavirus lockdown BJp சிவ்ராஜ் சிங் சவுகான் பொது முடக்கம் கரோனா வைரஸ் பாஜக
Shivraj Singh Chouhan Kamal Nath coronavirus lockdown BJp சிவ்ராஜ் சிங் சவுகான் பொது முடக்கம் கரோனா வைரஸ் பாஜக

By

Published : Jul 11, 2020, 11:39 PM IST

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், காணொலி வாயிலான பாஜக பேரணியில் உரையாற்றினார். அப்போது, “மாநிலத்தில் கரோனா பரவலுக்கு முந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “கரோனா வைரஸ் நெருக்கடி குறித்து கமல் நாத் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. நெருக்கடியின் போது இந்தூரில் விருந்து தொடர்பான நிகழ்ச்சி கூட்டங்களில் கலந்துகொள்வதில் அவர் மும்முரம் காட்டினார்.

சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாய கடன்களை தள்ளுபடி செய்துவிடுவோம் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை தள்ளுபடி செய்துவிட்டார்கள்” என்றும் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா குறித்து கூறுகையில், “காங்கிரஸில் நடக்கும் இதுபோன்ற நிலையை கண்டு அவர் வருந்தினார். அதனால் அவர் கேள்விகேட்டார். அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவரை வீதியில் துரத்தினார்கள்.

அதற்கு சிந்தியா அளித்த பதிலால் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ந்தது. இதற்காக நாம் என்ன செய்ய முடியும்?” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: 'கரோனாவை வீழ்த்திய தாராவி உலகிற்கே முன் மாதிரி' - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details