மத்தியப் பிரதேச பாஜக சார்பில் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆனந்திபென் படேலிடம், ஆளும் காங்கிரஸ் அரசில் பெரும்பான்மையில்லாததால், சிறப்பு பேரவைக் கூட்டத்தைக் கூட்டி அந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்தனர்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்! ம.பி. முதலமைச்சர் - floor test
போபால் : ஆளுநர் உத்தரவிட்டால் எப்போது வேண்டும் என்றாலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
கமல்நாத்
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் கமல் நாத் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, எங்களது அரசு கடந்த ஐந்து மாதங்களில் நான்கு முறை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆனாலும் பாஜகவினர் திரும்பவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ஆளுநரிடம் எங்கள் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதையடுத்து ஆளுநர் உத்தரவிடும் பட்சத்தில் எப்போதும் வேண்டுமானலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்என்றார்.