மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று கொல்கத்தா சென்ற கமல்ஹாசன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், அந்தமான் மற்றும் நிக்கோபாரில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைத்துள்ளதாகவும், இந்தக் கூட்டணி எதிர்காலத்திலும் தொடர விரும்புவதாக கூறினார்.